கிளைமேக்ஸ் பிடிக்காமல் விஜய் விலகிய படம், ஆனால் படம் வெளிவந்து சூப்பர் ஹிட்டானது, எந்த படம் தெரியுமா?

தளபதி விஜய் இன்று தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் கால்ஷிட் கிடைக்க இன்று ஒவ்வொருவரும் போராடி வருகின்றனர்.

ஆனால், விஜய்யை வைத்து படம் எடுக்க பலரும் யோசித்த போது அவரை வைத்து மெகா ஹிட் கொடுத்து அவருடைய திரைப்பயணத்தையே மாற்றியவர் விக்ரமன்.

அவர் இயக்கத்தில் வெளிவந்த உன்னை நினைத்து படத்தில் முதலில் விஜய் தான் நடித்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

அப்படத்தில் அவர் நடித்துக்கொண்டு இருக்கும் போதே ‘சார் எனக்கு இந்த கிளைமேக்ஸ் பிடிக்கவில்லை, மன்னித்துவிடுங்கள், ஏதோ எனக்கு உடன்பாடில்லை’ என்று கூறி விலகினாராம்.

அதே நேரத்தில் உன்னை நினைத்து படத்தில் பிறகு சூர்யா நடித்து படம் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது, இந்த விஷயத்தை விக்ரமனே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *